இலங்கையில் அதிகரித்து வரும் HIV தொற்று!


இலங்கையில் HIV தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்ளை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வியத்தகு அதிகரிப்பைக் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி,2025 ( National STD/AIDS Control Programme - NSACP 2025) ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச சம்பவங்கள் 2025 ஆம் முதல் காலாண்டில் பதிவாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான சம்பவங்களில், 30 ஆண்களும் இரண்டு பெண்களும் 15–24 வயதுக்குட்பட்டவர்கள், ஏனைய சம்பவங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

2025 ஆம் ஆண்டில் பதிவான HIV தொற்றுகளின் ஆண்-பெண் விகிதம் 6.6:1 ஆக காணப்படுகின்றது.

மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) தொடர்பான 10 இறப்புகள் பதிவாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டில், மொத்தம் 47 நபர்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த வகையில் இலங்கை கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான HIV பரிசோதனைகளை நடத்தப்பட்டது.

அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சமீபத்தில் இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பரிந்துரைக்கப்பட்டது.