கழிவறை கோப்பைக்குள் இருந்து சீறிய கறுப்புநிற நாகபாம்பு ; பதறிய சுற்றுலாப்பயணி!


கழிவறைக்குள் இருந்து நாகபாம்பு ஒன்று சீறிப்பாய்ந்து படமெடுக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது. 

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர் பகுதியிலுள்ள ஹோட்டலில்  சுற்றுலாப் பயணிகள் சிலர்  தங்கியிருந்தனர்.  

அதில் சுற்றுலாப் பயணி ஒருவர் 2 ஆவது மாடியில் தங்கியிருந்த அவர்களில் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். 

அப்போது கழிவறையின் கோப்பைக்குள் பெரிய பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பதறியடித்த பயணி உடனே  கழிவறைக்  கதவை திறந்துகொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். 

பின்னர் பாம்பை  அலைபேசியில்  படம் பிடிக்க ஆரம்பித்தார். அவரது சத்தம் கேட்டு அறையில் இருந்த மற்றப் பயணிகளும் ஓடிச் சென்றனர். 

கழிவறைக்குள் கோப்பைக்குள் கறுப்புநிற நாகபாம்பு ஒன்று மனிதர்களை கண்டு அச்சம் அடையாமல் படமெடுத்து சீறியபடி நிற்கும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.