வீதியில் சென்ற குழந்தையை மோதித் தள்ளிய டிப்பர் ; சிகிச்சை பெற்று வந்த குழந்தை பலி!


வீதியில் சென்று கொண்டிருந்த குழந்தை மற்றும் பெண்ணொருவரை டிப்பர் மோதித்தள்ளியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை பரிதாபமாக உயிலிழந்துள்ளது. 

உஹன பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து அம்பாறை , கல்முனைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை  ( 22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வீதியோரத்தில் நடந்து சென்ற குழந்தை மற்றும் பெண்ணொருவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் குழந்தையும் பெண்ணும் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில்  சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேலும் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன  சாரதி கைது செய்யப்பட்டார். அதனையடுத்து விபத்து தொடர்பான   மேலதிக விசாரணைகளை  அம்பாறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.