ஷேக் ஹசீனாவுக்கு தோ்தலில் வாக்களிக்க தடை!


பங்களாதேஷில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டையை முடக்கியதன் மூலம், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தோ்தலில் அவா் வாக்களிப்பதற்கு தோ்தல் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.

இது குறித்து ஆணைக்குழுவின் செயலாளர் அக்தா் அஹமது கூறுகையில்,

அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டவா்கள் வெளிநாட்டிலிருந்து வாக்களிக்க முடியாது. ஹசீனாவின் அட்டை முடக்கப்பட்டுள்ளது என்றாா்.