நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!


விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகவெல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.