எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஹரிணி அஞ்சலி!
எல்ல–வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தங்காலை நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் நகர சபைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் (4) இரவு, தங்காலை நகர சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல–வெல்லவாய பிரதான சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், தங்காலை நகர சபை செயலாளர், 12 நகர சபை ஊழியர்கள், 2 குழந்தைகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் முழு நாட்டையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
