காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


காசாவில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 513 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடுமையான பசியால் வாடும் காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் 103 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காசா வைத்தியசாலை மீது நடந்த தாக்குதலில் 5 அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் ஊடகவியலாளர்கள் கொலை தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் பொறுப்பேற்று கொண்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகிய நிலையில் பல சர்ச்சை எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.