திடீரென சுகயீனமுற்று பாடசாலை மாணவி உயிரிழப்பு - கெக்கிராவையில் சம்பவம்!


அநுராதபுரம் - கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காகபாடசாலை பஸ்ஸிற்காக வீதியோரம் காத்திருந்த மாணவி திடீரென சுகயீனமுற்று மயக்கமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மயக்கமடைந்த மாணவியை பாடசாலை குழுவினர் இணைந்து பாடசாலை பஸ் மூலம் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவி 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 11 வயதுடைய சிகிரியாவின் டல்கோட்டில் வசிப்பவர் ஆவார்.

மாணவியின் மரணம் குறித்து உடலில் தடயவியல் வைத்திய பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.