க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி ஓகஸ்ட் 12ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஓகஸ்ட் 7 ஆம் திகதி ஒன்லைனில் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகளால் பாதிக்கப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு இந்த நீடிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் நீடிப்புகள் வழங்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
