முன்னாள் ஜனாதிபதி ரணில் விரைவில் வீடு திரும்புவார் - மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி!


இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ கணக்கை டேக் செய்து, விக்ரமசிங்கவின் வருகையை "மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக" நஷீத் கூறியுள்ளார்.