இலங்கையில் உள்ள மொத்த குடும்பங்களில் 71% சதவீதமானோர் நிவாரண உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்!
இலங்கையில் உள்ள மொத்த குடும்பங்களில் எழுபத்தொரு சதவீதம் பேர் நிவாரண உதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை குடும்பங்களின் மனநிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கிராமப்புற வறுமையை ஒழிப்பது எங்கள் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
உதவி கோருபவர்களில் 71 சதவீதம் பேர் உதவியை நம்பி ஒரு குடும்பம் வளர்ச்சியடைய முடியாது.
நலத்திட்ட நிதி உதவிகளை வழங்கும் அதே வேளையில், மறுபுறம் சமூகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மில்லியன் ஏழைக் குடும்பங்களை மேம்படுத்தும் திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் உள்ள 52 இலட்சம் மொத்த குடுங்களில் 37 இலட்சம் குடுங்கள் அஸ்வெசும பெற விண்ணப்பித்துள்ளதாகவும்,
அதில் 19 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும பெற தகுதி பெற்றவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி