7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி!


வெளிநாடுகளுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மாத்திரம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் கஞ்சா பயிரிட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக இந்த முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீரிகம பிரதேசத்திதற்காக தற்போது 64 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கஞ்சா பயிரிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஞ்சா பயிரிடும் முதலீட்டாளர்களிடம் 20 லட்சம் பிணை தொகை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.