சொந்த மகள் மீது பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் தந்தை கைது!
மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தனது 16 வயதான மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சியம்பலாந்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் சியம்பலாந்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துகண்டிய ஹதரவன கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த மூன்று மாதங்களாக தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டதாக பாடசாலை வகுப்பு ஆசிரியரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான ஆசிரியரின் புகாரின் அடிப்படையிலேயே சந்தேகநபர் வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாயார் சிறுவயதிலேயே அவரையும், அவரது இரண்டு தங்கைகளையும் விட்டுவிட்டு சென்றுள்ளார். சிறுமி தந்தை மற்றும் தங்கைகளுடன் ஒன்றாகவே வசித்து வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த வேளைகளில் தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறுமி தற்போது மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாந்துவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரவீந்திர ஹேரத் முன்னெடுத்து வருகிறார்.