ரஷ்யாவில் மாயமான விமானம் விழுந்து நொறுங்கியது: பயணித்த அனைவரும் உயிரிழப்பு?


ரஷ்யாவில் இன்று An – 24 என்ற பயணிகள் விமானம் திடீரென்று மாயமானது. அந்த விமானம் அமுர் பகுதியில் விழுந்து நொறுங்கி தீ்ப்படித்து எரிந்தது.

இதில் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் உள்பட 49 பேரும் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மீட்பு படையினர் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் விமான விபத்துக்கு பைலட் செய்த தவறு காரணமாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் சைபீரியாவை தலைமையிடமாக கொண்டு ‛அங்காரா’ என்ற விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று ரஷ்யாவின் பிளேகோவெஷ்சென்ஸ்க் நகரத்தில் இருந்து டிண்டா நகருக்கு புறப்பட்டது.

இந்த டிண்ட நகர் என்பது சீனாவின் எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ளது. விமானத்தில் 6 பணியாளர்கள், 5 குழந்தைகள் உள்பட மொத்தம் 43 பேர் இருந்தனர்.

இந்த விமானம் டிண்டா நகரை நெருங்கியது. அப்போது திடீரென்று மாயமானது. ரேடாரில் இருந்து விமானம் விலகி சென்றது.

இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்பை இழந்த இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்தனர். அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது.

இந்த விமான விபத்தில் அதில் பயணித்த 43 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் தான் விமான விபத்துக்கான காரணம் குறித்து ரஷ்யாவின் பிரபலமான அரசு செய்தி நிறுவனமான TASS முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளது

‛‛தரையிறங்க வேண்டிய இடத்தை நெருங்கியவுடன் விமானிகள் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அப்போது காலநிலை மோசமாகி உள்ளது. விமானத்தில் இருந்து சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் விமானத்தை தரையிறக்க பைலட் முயன்று தவறு செய்தது தான் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டமாக சொல்லப்படுகிறது.

தற்போது விமான விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.