ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


சமீப காலமாக ஒற்றைத் தலைவலி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக நரம்பியல் நிபுணர் டொக்டர் காமினி பதிரானா தெரிவித்தார்.

ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் காமினி பதிரானா அறிவுறுத்தினார்.