வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து பண மோசடி செய்யும் நிகழ்வுகள் அதிகரிப்பு!
தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து மோசடி செய்யும் நபர்களால் நிதி மோசடிகள் நடைபெறுவதாக, இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டவர்கள் support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தங்கள் கணக்குகளை மீட்டெடுக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற மோசடி சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் https://telligp.police.lk என்ற இணையதளம் மூலம் காவல்துறையின் மின்னணு குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.
நபர்களின் தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து அவரின் நண்பர்கள் , உறவினர்களுக்கு ஹேக் செய்யப்பட்ட நபரை போன்றே சூட்சுமமான முறையில் மெசேஜ் அனுப்பி பணம் கேட்கிறார்கள்.
இந்த மெசேஜை பெறும் நபர்கள் நம்பி அவர்கள் தரும் வங்கி கணக்குகளில் ஒன்றரை இலட்சம் உள்ளிட்ட பணத்தை வைப்பில் இட்ட சம்பவங்களும் பதிவாகி உள்ளது.
பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.