இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! – நால்வர் படுகாயம்


மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்துக்குள்ளான பேருந்து பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதோடு, மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிய பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் இரு சாரதிகள் மற்றும் பின் இருக்கையில் பணித்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, 

பின்னர் மோட்டார் சைக்கிள்  சாரதி  ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

​சம்பவத்தில் 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.