நாட்டிலுள்ள அரிசி மாபியாவை ஒழிக்க விசேட திட்டம்!
நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியையொத்த ஜீ.ஆர். ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அரிசிக்கான மாபியாக்களை ஒழிக்கும் வகையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இந்தியாவிலிருந்து 40ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுவதோடு, ஒரு கிலோ அரிசியை 250 ரூபாவுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யமுடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், எனினும், சீரற்ற காலநிலை மற்றும் ஏனைய காரணங்களால் அவை தடைப்படுமிடத்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி