பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!


ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரித்தாலும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாதென இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் வேன் கட்டணம் அதிகரித்தால், மாணவர்களின் எண்ணிக்கையும் குறையுமென்றும் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்த முடியாத பெற்றோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்த முடியாதென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.