இலஞ்ச ஊழல் அதிகாரியை அச்சுறுத்திய வழக்கில் வைத்தியரின் மகள் கைது!


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக இக்கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நரம்பியல் விசேட மருத்துவ நிபுணர் மஹேஷி விஜேரத்ன தம்மிடம் வரும் நோயாளர்களை தனியார் மருந்தகங்களுக்கு அனுப்பி அங்கு மருந்துகள், உபகரணங்களை கொள்வனவு செய்ய பணிப்புரை விடுத்தமை, முறைகேடாக வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் (04) குறித்த வைத்திய நிபுணரின் மகள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து மிரட்டிய சம்பவமொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.