மாணவர்களை முதலாம் தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் வெளியீடு


2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் அனைத்தும் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.moe.gov.lk இல் அது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.