பஸ் மற்றும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்
எரிபொருள் விலை குறைந்தாலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் விலை 25 ரூபா முதல் 30 ரூபா வரை குறைந்தாலே மட்டுமே கட்டண மாற்றம் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறினார். தற்போது டீசல் லீற்றருக்கு 12 ரூபா குறைந்தாலும், அதனால் கட்டண திருத்தம் செய்ய முடியாது எனவும் விளக்கினார்.
மேலும், வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேவேளை, பெற்றோல் விலை குறைந்த போதிலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்தி