பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவு!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு இலக்காகி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது.
அந்த மாணவர் Shorts (குறுந்துணி) அணிந்து நடமாடியதை முன்னிட்டு, சிலர் அவரை அவமதிக்கும் வகையில் அனைத்து உடைகளையும் கழற்ற வைத்து நிர்வாணப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் அவமானத்தை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
இலங்கை செய்தி