மத்திய மாகாண சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவிற்குள் செல்லும் பல முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹட்டன்-நுவரெலியா வீதிமுதல் நானுஓயாவிலிருந்து நுவரெலியா வரையிலும், நுவரெலியா-பதுளை வீதிமுதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா-கம்பொல பம்பரகல வரையிலும் தற்போது அடர்ந்த மூடுபனி காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மூடுபனி காலங்களில் வாகன சாரதிகள் எச்சரிக்கையாகவும் , மெதுவாகவும் வாகனங்களை ஓட்டுவதோடு இந்த வீதிகளில் செல்லும்போது ஹெட்லைட்களை எரியவிடுமாறும் நுவரெலியா பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி