அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு வேக எல்லை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
அதிக மழை பெய்யும் காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் அதிக எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
மழைக்காலங்களில் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிவேக நெடுஞ்சாலை செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பிரிவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளமையால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி