இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - நகைப் பிரியர்களுக்கு குட்நியூஸ்..!


நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தளம்பல் நிலையில் காணப்பட்ட நிலையில், நேற்றைய தின தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று தங்க பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 262,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 240,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 196,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,063 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,563 ரூபாவாகவும் விற்பனை  செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.