இன்றைய தினம் முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்!


டெங்கு ஒழிப்பு வாரம் இன்றைய தினம் (19) முதல் ஆரம்பமாகியுள்ளது.

டெங்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுப்புறங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.