முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
முதலாம் தவணை இன்றுடன் முடிவடைந்து 28ஆம் திகதி 2ஆம் தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைக்கான விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் பணிப்பாளர் மேஜர் டி.நசுமுதீன் அறிவித்துள்ளார்.
இதன்படி ஹஜ் பெருநாளுக்கு முந்திய தினமான 6ஆம் திகதியும் (அரபா தினம்) 9ஆம் திகதியும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
26, 27 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் வழமைப்போல நடைபெறும்.
Tags:
இலங்கை செய்தி