போலி விளம்பரங்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக இணைய வசதி வழங்கும் தானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் தொடர்பில் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, இலவச இணைய வசதிகள் மற்றும் 50GB Data வழங்குவதாகக் கூறி, மோசடி தகவல் ஒன்று வேகமாகப் பரவி வருவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இலவச இணைய வசதியை (free wifi) வழங்குவதற்கு உங்களது OTP இலக்கத்தை பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்களிடமிருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி உங்களது OTP இலக்கத்தை அதில் பதிவு செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தும் போலியானவை எனவும், அவ்வாறு தகவல்கள் வரும் செயலிகளில் யாரும் தங்கள் தனிப்பட்ட தரவை உள்ளிடக்கூடாது என இலங்கை பொலிஸார் தங்கள் பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி