6 நிமிடம் இருளில் மூழ்க உள்ள உலகம்!
சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுத்து, அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.
ஆனால் அடுத்து வர உள்ள கிரகணம் ஒன்று, உலகின் பெரும் பகுதியை இருளில் மூழ்கடிக்க உள்ளது. மிக அபூர்வமான சூரிய கிரகணம் மற்றும் உலக நாடுகளில் பல இடங்களில் இருளில் மூழ்க கூடிய அளவுக்கு கிரகணம் உண்டாகிறது.
பெரிய வட ஆப்பிரிக்க கிரகணம் அல்லது நூற்றாண்டின் கிரகணம் என அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணம் வரும் ஆகஸ்ட் 2, 2027 அன்று ஏற்பட உள்ளது.
இந்த சூரிய கிரகணம் பல காரணங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலாவதாக, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதனை 1991 மற்றும் 2114-இன் இடையே, நிலத்தில் இருந்து காணப்படும் மிக நீண்ட முழுமையான கிரகணம் என தெரிவித்துள்ளனர்.
2027 ஆம் ஆண்டு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் தெரியும். இது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும். மற்ற சூரிய கிரகணங்களைப் போல இது இருக்காது.
இந்த கிரகணத்தின் கால அளவு 6 நிமிடங்கள் 23 வினாடிகள். இதுவே மிக நீண்ட சூரிய கிரகணமாகும்.
அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கும் இந்த கிரகணம், 3 கண்டங்களை கடந்து, இந்தியப் பெருங்கடலில் மறைந்துவிடும். இந்த கிரகணத்தின் மொத்த பாதை 275 கிமீ அகலம் கொண்டது ஆகும்.