காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் - 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழப்பு!
ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் இருந்த பணய கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் இடன் அலெக்சாண்டர் என்பவரை விடுதலை செய்த அதே சமயம், இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில், வடக்கு காஸாவில் நேற்றைய தினம் (13) இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழந்ததாக காஸாவில் உள்ள வைத்தியசாலைகள் தகவல் தெரிவித்துள்ளன.
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 52,600 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
உலகம்