மருமகனை அடித்தே கொன்ற மாமனார்!


ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமனார் அடித்தே கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஆனமடுவ, வதத்த, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத மஹமுதன்நாயக்க முதியன்சலாகே சஜீத் திவங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயாரின் தம்பி என்றும், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு கடத்தலில் ஈடுபடுபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரின் கடைக்கு முன்னால் நடத்தப்பட்ட சூதாட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த கொலை இடம்பெற்றமையானது, நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.