சிஐடியில் இருந்து வெளியேறினார் நாமல்!


இன்று திங்கட்கிழமை (07) காலை நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

நாமல் ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது  தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகி விட்டது என்றார்.

மேலும், மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை தொடர்பில் வினவபட்டது.

இதன் போது, நான் வீட்டிற்கு சென்று பார்த்த போது தந்தை மஹிந்த ராஜபக்ஷ நலமாக இருந்தார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.