ஸ்ரீ தலதா கண்காட்சியை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்


தலதா கண்காட்சியை பார்வையிடும் கால அளவை ஒரு மணி நேரம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தப்பட்ட நேரத்திற்கமைய காலை 11 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையிடமுடியும்.

நாடு முழுவதிலுமிருந்து கண்டிக்கு வருகை தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்ரீ தலதா கண்காட்சி நேரத்தை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகை அறிவித்துள்ளது.