வீட்டில் கஞ்சா வளர்த்த மருத்துவர் கைது!


வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்ததற்காக பண்டாரவெல, கொஸ்லந்த பகுதியில் உள்ள  மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது,  மருத்துவரின் வீட்டில் சுமார் 4 அடி உயரமுள்ள 14 கஞ்சா மரங்கள் அங்கு காணப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மருத்துவர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.