குருநாகல் எரிவாயு நிரப்பு நிலையத்தில் திடீர் தீ விபத்து - நால்வர் பலி!


குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

இதில் காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தீப்பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.