வெசாக் தன்சல் குறித்து வெளியான விசேட அறிவுறுத்தல்


எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோர், மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை பதிவு செய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தன்சல்களை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்தச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை, வெசாக் காலப்பகுதியில் செயல்படும் தன்சல்கள், உணவு விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை வாகனங்கள் ஆகியவை விசேட சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இந்த விசேட நடவடிக்கைகளில் சுமார் 3,000 பேர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.