அமைச்சர்களின் பெறுமதியான பங்களாக்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு


சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சில பங்களாக்களை சுற்றி அதிகப்படியான காடுகள் வளர்ந்திருப்பதால் பல அமைச்சர் பங்களாக்கள் பாழடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக பயன்படுத்தப்படாததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பல அமைச்சர் பங்களாக்கள் பயன்படுத்த முடியாததாகிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு பழுதுபார்க்க வேண்டியிருக்கும் என்றும், புதுப்பிப்பதற்கான நிதியை திரட்டுவது ஒரு பிரச்சினை என்றும் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 50 பங்களாக்கள் உள்ளன. இந்த பங்களாக்களை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை  பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

இந்த அமைச்சர் பங்களாக்களை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் திட்டங்களுக்குப் பயன்படுத்தவுள்ளதாக  அரசாங்கம்  நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.