யுவதியின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என கூறிய வாலிபருக்கு தர்ம அடி!


தமிழகத்தின் சென்னை தி.நகரின் வீதியில், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து அலுவலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் ஒருவர் குறித்த இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த யுவதி கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்து வந்த பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.