பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மேல் மாகாணம், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று, மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் மணிக்கு 25-35 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்புகளில், காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 45 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
இந்த பகுதியின் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சிறிதளவு முதல் மிதமான நிலை வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும், மேலும் கடல் மிகுந்த கொந்தளிப்பாகவும் காணப்படும்.