உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக அறிவித்த ட்ரம்ப் அரசு!
சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் சூழலில் உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களின் சமூக பாதுகாப்பு எண்கள் இரத்து செய்யப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. தற்போது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட வெவ்வேறு நாட்டை சேர்ந்த 6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள குடியேறிகள், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் தொடங்கப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களென தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அவர்கள் அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள். இறந்தவர்களாக கருதப்பட்டு அவர்களின் சமூகப் பாதுகாப்பு எண்களை இரத்து செய்யப்பட்டதால் அவர்களால் அமெரிக்காவில் வேலை செய்யவோ அல்லது சலுகைகளைப் பெறவோ முடியாதென தெரிவித்துள்ளது.
குடியேறிகளுக்கு இந்த சட்டப்பூர்வமான சமூக பாதுகாப்பு எண்கள் பைடன் நிர்வாகத்தால் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது ட்ரம்ப் நிர்வாகம் இந்த குடியேறிகளின் சமூகப் பாதுகாப்பு எண்களை பறிப்பதன் மூலமும், வங்கிகள் அல்லது பிற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துவதை கடினமாக்குவதன் மூலமும் அவர்கள் தாமாக நாட்டை விட்டு வெளியேறும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
