நாளை கொழும்பில் 15 மே தின பேரணிகள் ஏற்பாடு..!


நாளை (மே 1) கொழும்பில் குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

அதற்கமைய, சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளனர்.

நாடு முழுவதும் நடைபெறும் மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவு நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் ஆகியோருக்கு பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை வழங்கியுள்ளது.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.

ஆகையால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.