தங்கத்தின் விலையில் திடீர் சரிவு!


இன்றைய நிலவரப்படி, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் 238,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் 220,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு கிராம் 24 கரட் தங்கத்தின் விலை 29,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 27,500 ரூபாயாகவும் காணப்படுகிறது.

நேற்று, 24 கரட் தங்கப் பவுணின் விலை 239,000 ரூபாயாக இருந்த நிலையில், 22 கரட் தங்கப் பவுண் 219,000 ரூபாயாக இருந்தது. அண்மைய நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சிறிய அளவில் விலை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெள்ளி ஒரு கிராம் 420 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.