ஓய்வூதியம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது, சிறப்புரிமைகள் சட்டம் திருத்தப்படும் என்றும், இந்தச் சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 1 மில்லியன் ரூபாய் காப்பீட்டு இழப்பீட்டை 2.5 மில்லியன் ரூபாயாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன், தனக்கு இனி நாடாளுமன்ற ஓய்வூதியம் தேவையில்லை என இன்று ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி