புதையல் தோண்டிய நால்வர் கைது!


அம்பாறை - இங்கினியாகல – கொக்னஹர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் இங்கினியாகல பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (10) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்கினியாகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் அம்பாறை பகுதியைச் சேர்ந்த, 40, 47, 51 மற்றும் 57 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இங்கினியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.