TIN இல்லாதவர்களுக்கு விசேட சலுகை - அரசாங்கம் அறிவிப்பு!
TIN இலக்கத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்க TIN இல்லாதவர்களுக்கும் விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது.
TIN இலக்கம் இல்லாதவர்களும் வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், வாகன வருமான உரிமங்களைப் புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்தச் சேவைகளைப் பெற முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
