தங்க நகை வாங்கக் காத்திருப்போருக்கு அதிர்ச்சி – இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் மாத ஆரம்பம் முதல் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தங்க நகைகளை வாங்கக் காத்திருப்போர் மத்தியில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 21ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், இன்று (23) 22 கரட் தங்கத்தின் விலை 3,400 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் விலையும் 3,000 ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.
இன்றைய தங்க விலை
- 22 கரட் தங்கம்: ஒரு பவுண் 317,400 ரூபா
- 24 கரட் தங்கம்: ஒரு பவுண் 345,000 ரூபா
கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலை மாற்றம் தங்க நகைகளை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
