மீண்டும் உயரப்போகும் மின்கட்டணம்..! வெளியான அறிவிப்பு
மின்கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டின் 4-ம் காலாண்டிற்கு மின்கட்டணத்தை 2.88% ஆல் உயர்த்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO) யோசனை முன்வைத்துள்ளது.
ஆனால் 1.46% அதிகரிப்பை மட்டுமே நடைமுறைப்படுத்தலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இறுதி முடிவு நாளை (05) நடைபெறும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு பின்னரே எடுக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் 0770399119 என்ற இலக்கத்திற்கு அழைத்து பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
