பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான புதிய விதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான புதிய விதிகளை உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார். சுமார் இரண்டு லட்சம் பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்ட பொதுமக்கள் ஆலோசனைக்கு பிறகு இந்த புதிய குடிவரவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இதுவரை ஐந்து ஆண்டுகள் வசித்தால் தானாக கிடைத்து வந்த நிரந்தர வதிவிட உரிமை முறை நீக்கப்பட்டு, இனி குறிப்பிட்ட தகுதிகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி நிரந்தர வதிவிடத்திற்கான அடிப்படை காத்திருப்பு காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும், உயர்தர ஆங்கில மொழித் திறன் கொண்டிருக்க வேண்டும், அரசாங்கத்திற்கு நிலுவைக் கடன்கள் இருக்கக்கூடாது, மேலும் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கான தேசிய காப்பீட்டு பங்களிப்பை செலுத்தியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஆண்டுக்கு 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கும், மருத்துவர்கள், தாதியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் போன்ற குறிப்பிட்ட துறைகளை சேர்ந்தவர்களுக்கும் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர வதிவிட உரிமை பெறும் விரைவு வழிமுறை தொடர்ந்து இருக்கும் எனவும், இந்த தகுதிகளை பூர்த்தி செய்யாதவர்கள் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.