பாடசாலை நேர அட்டவணை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு
புதிய கல்விச் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு இணையாக பாடசாலை நேர அட்டவணைகளை தயாரிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
புதிய பாடத்திட்ட அறிமுக திட்டம்:
- 2026: 1-ம் தரம்
- 2027: 2 மற்றும் 6-ம் தரம்
- 2028: 3 மற்றும் 7-ம் தரம்
- 2029: 4, 8 மற்றும் 10-ம் தரம்
- 2030: 5, 9 மற்றும் 11-ம் தரம்
- 2031: 12-ம் தரம் - இந்த பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்கள் முதன்முறையாக 2033-ல் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுவார்கள்.
புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்போது சில தரங்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும்:
- 2027-ல் 3, 4, 5-ம் தரங்கள்
- 2028-ல் 4, 5-ம் தரங்கள்
- 2029-ல் 5-ம் தரம்
இதனால் அந்தந்த ஆண்டுகளில் பாடத்திட்ட அறிமுக திட்டத்தை கருத்தில் கொண்டு நேர அட்டவணைகளை தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
